உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம்: போதை வாலிபர் கைது

ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம்: போதை வாலிபர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரயிலில் வந்த பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் சென்னை, பாடி பகுதியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் பி.3 பெட்டியில் பயணித்தார்.நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ரயில் விழுப்புரம் அருகே வந்த போது துாங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணிடம், அதே பெட்டியில் பயணித்த ஒருவர் போதையில் சில்மிஷம் செய்துள்ளார். அப்பெண் கூச்சலிட்டதால் சக பயணிகள் அந்த நபரை பிடித்து, விழுப்புரம் ரயில் நிலையம் வந்தவுடன், ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர் திருச்சி, துவாக்குடியை சேர்ந்த அறிவுசெல்வன் மகன் அருள்பாண்டி,24; என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை