உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குடிபோதையில் தகராறு; 11 பேர் மீது வழக்கு

குடிபோதையில் தகராறு; 11 பேர் மீது வழக்கு

விழுப்புரம்; வளவனுார் அருகே குடிபோதையில் ஏற்பட்ட கோஷ்டி தகராறில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் அடுத்த இளங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் ராமகிருஷ்ணன், 35; இவரது நண்பர் கார்த்திக், 32; இருவரும் நேற்று முன்தினம் புதுச்சேரி அடுத்த மதகடிப்பட்டு ஒயின் ஷாப்பில் மது அருந்தினர்.அப்போது, இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த கலிவரதன் மகன் அப்பு, 32; சிவமாணிக்கம் மகன் குணசீலன், 33; ஆகிய இருவரும், ராமகிருஷ்ணனிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டினர். ராமகிருஷ்ணன் மறுத்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு சென்ற ராமகிருஷ்ணன் மீண்டும் தகராறு செய்ததால், இரு தரப்பினராக மாறி தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் அப்பு, ஸ்டாலின், சேது, குணசீலன், அங்காளன், ராமதாஸ், சரண்ராஜ், அசோக், விமல், சின்ராஜ், சஞ்சய் ஆகியார் மீது வழக்குப் பதிந்து, அதில் அப்பு, விமல், சின்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ