டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
செஞ்சி : செஞ்சியில் புதிய டி.எஸ்.பி.,யாக ரமேஷ் ராஜ் பொறுப்பேற்றார். செஞ்சியில் டி.எஸ்.பி., யாக பணிபுரிந்து வந்த கார்த்திக பிரியா மகப்பேறு மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இதையடுத்து ராணிப்பேட்டையில் குற்ற பிரிவு டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த ரமேஷ்ராஜ் செஞ்சி டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இவர்,புதியதாக பொறுப்பேற்று கொண்டதையடுத்து, செஞ்சி உட்கோட்ட காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.