உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்

மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமை தாங்கி மின் நுகர்வோர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.செயற் பொறியாளர் செந்தில்நாதன் மற்றும் அனைத்து உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் கோட்ட மின் நுகர்வோர், மின்துறை தொடர்பான கோரிக்கைகள், புகார்கள் குறித்து, மனுக்கள் வழங்கி முறையிட்டனர்.கூட்டத்தில், திருவெண்ணைநல்லுார் அடுத்த இளந்துரை பகுதியில் புதிய துணைமின் நிலையம் அமைக்க வேண்டும். மின் கட்டணத்தில் குறைபாடுகள், மின் கட்டண ரீடிங் புகார், விவசாய மின் இணைப்பு கோரிக்கை என மின்துறை தொடர்பாக 10 கோரிக்கை மனுக்கள் பெற்று விசாரித்தனர்.இந்த மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க, அந்தந்த பகுதி மின்துறை அலுவலர்களுக்கு, மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்