உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிரம்: தனிப்படை அமைத்து போலீஸ் கண்காணிப்பு

மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிரம்: தனிப்படை அமைத்து போலீஸ் கண்காணிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை கடத்துவோரை கண்காணிக்க அமைக்கப்பட்ட தனி படைகளை, எஸ்.பி., டீம் ரகசியமாக கண்காணித்து வருகின்றது.மரக்காணத்தில் கள்ளச் சாராயத்தில் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு பிறகு கள்ளச்சாராயம் விற்பனையை போலீசார் ஒழித்துள்ளனர். கள்ளச்சாராயம் ஒழிந்த பின்பு, 24 மணி நேரமும் போதையில் திரியும் இளைஞர்கள் மாற்று போதை பொருள் கஞ்சா, குட்காவை உட்கொள்ள துவங்கி விட்டனர்.கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இளைஞர்கள் கையில் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கைகளிலும் சுலபமாக வந்து சேருகிறது. இதனால், பள்ளி மாணவர்களும் போதையில் தள்ளாடுவதோடு, இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களிலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்களை ஒழிக்க விழுப்புரம் மாவட்டத்தில் காவல் நிலையங்களிலும் எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தனிப்படைகள் தங்கள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை, கஞ்சா வரும் வழிகளை கண்டு பிடிப்பதுடன், கஞ்சா நுழையவிடாமல் தடுப்பது முழு நேர பணியாக ஈடுபட்டுள்ளனர்.தனிப்படை போலீசார் மாதம் தோறும் எஸ்.பி.,க்கு, கஞ்சா வழக்குகள் குறித்து கணக்கு காட்டுவதிற்காக, குறைந்த எண்ணிக்கையில் கஞ்சா, குட்கா பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். தனிப்படைகள் அமைத்தும் விழுப்புரம் மாவட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் குறையவில்லை.இதனால் கஞ்சா புழக்கத்தை தடுக்க அமைத்த தனிப்படைகளை கண்காணிக்க தனி டீம் ஒன்றை நியமித்து ரகசியமாக கண்காணித்து வருகிறார்.எஸ்.பி., டீம் கஞ்சா தடுப்பு தனிப்படை போலீ சாரின் செயல்பாடுகளை கண்காணிக்க துவங்கி உள்ளனர்.

கஞ்சா செடி வளர்ப்பு

கஞ்சா வழக்கில் கைதான நபர்களிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்திற்குள் கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்யும் நபர்கள் பெயர் பட்டியல் கிடைத்துள்ளது. பட்டியலில் உள்ள பலர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களின் செல்வாக்கில் உள்ளதால் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலில், விழுப்புரத்தில் சிலர் வீட்டின் மொட்டை மாடிகள், தோட்டங்களில் கஞ்சா செடி வளர்ப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.கஞ்சா செடி வளர்ப்போரை கண்டறிந்து அகற்றுவதற்கான பணிகளையும் தீவிரமாக செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

என்றும் இந்தியன்
ஏப் 14, 2025 17:42

மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிரம்: தடுக்க அல்ல , உயர்த்த என்று படிக்கவும் டாஸ்மாக்கினாட்டின் உண்மை நோக்கம் புரியும். அதிலிருந்து கமிஷன் குறைவாக வருவதால் இந்த நடவடிக்கை என்று அறிந்து கொள்ளவும்


முக்கிய வீடியோ