உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்டையில் மூழ்கி முதியவர் பலி 

குட்டையில் மூழ்கி முதியவர் பலி 

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே குட்டையில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.கண்டமங்கலம் அருகே உள்ள தாண்டவமூர்த்திகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்,82; இந்த நிலையில் அரியூர்-தாண்டவமூர்த்தகிகுப்பம் சாலையில் உள்ள ஆழமான குட்டையில் செல்வராஜ் இறந்து கிடப்பதாக கண்டமஙகலம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடலை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி