உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பஸ் மோதி மூதாட்டி பலி

 பஸ் மோதி மூதாட்டி பலி

மரக்காணம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை இ.சி.ஆர்., ஓரம் மீன் கடையில் பஸ் புகுந்ததால் மூதாட்டி இறந்தார். மரக்காணம் அடுத்த கோமுட்டிச்சாவடி குப்பத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி செந்தாமரை, 70; இவர், அனுமந்தை இ.சி.ஆர்., ஓரத்தில் கொட்டகை அமைத்து மீன் விற்பனை செய்து வருகிறார்.நேற்று முன்தினம், புதுச்சேரியில் இருந்து மரக்காணம் நோக்கி வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து மீன் கடையில் புகுந்தது. இதில் மீன் விற்பனை செய்து கொண்டிருந்த செந்தாமரை பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கி இறந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ