உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதி மூதாட்டி பலி

கார் மோதி மூதாட்டி பலி

வானுார்:கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி உயிரிழந்தார். கிளியனுார் அடுத்த கொந்தமூர் பிரதான சாலையை சேர்ந்தவர் கண்ணன் மனைவி பாக்கியலட்சுமி, 65; இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு கொந்தமூர் சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார். அப்போது திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார், பாக்கியலட்சுமி மீது மோதியது. அதில் துாக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கிளியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி