உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்குவாரி குட்டையில் தவறி விழுந்த மூதாட்டி பலி

கல்குவாரி குட்டையில் தவறி விழுந்த மூதாட்டி பலி

வானுார்: கிளியனூர் அருகே கல்குவாரி குட்டையில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார். கிளியனூர் அருகேயுள்ள மொளசூர் இந்திரா நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் வசந்தா, 67; நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது உறவினவர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை திண்டிவனம் அரசு ஐ.டி.ஐ., அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து இறந்து கிடப்பது தெரிய வந்தது. கிளியனூர் போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை