உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி

தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி

செஞ்சி: செஞ்சியில் பொது மக்கள் லோக்சபா தேர்தலில் ஓட்டு போடுவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ரங்கோலி கோலப்போட்டி நடந்தது.வரும் லோக்சபா தேர்தலில் பொது மக்கள் ஓட்டு போடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரணி தொகுதிக்குட்பட்ட செஞ்சியில் தேர்தல் பிரிவு சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரங்கோலி கோலப்போட்டி நடந்தது.பொன்பத்தி சாரல், பிரண்ட்ஸ், முல்லை, சிங்கவரம் வசந்தம் மகளிர் சுய உதவிக் குழுவினர் போட்டியில் பங்கேற்றனர்.தாசில்தார் ஏழுமலை தலைமையில் கோலங்களை பார்வையிட்டு சிறந்த மூன்று கோலங்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வட்ட வழங்கல் அலுவலர் மலர்விழி முன்னிலை வகித்தார்.தேர்தல் உதவியாளர் சரவணன் வரவேற்றார். மண்டல துணை தாசில்தார் வேல்முருகன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை