| ADDED : பிப் 06, 2024 04:04 AM
விழுப்புரம் : விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வீட்டு எலக்ட்ரிக்கல் ஒயரிங் இலவச தொழிற்பயிற்சி துவங்கப்பட உள்ளது.இதுகுறித்து நிறுவனத்தின் செய்திக்குறிப்பு:விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வீட்டு எலக்ட்ரிக்கல் ஒயரிங் 30 நாட்கள் இலவச தொழிற் பயிற்சி துவங்கப்பட உள்ளது. இதற்கான நேர்முக தேர்வு நாளை 5ம் தேதி நடக்கிறது. இந்த பயிற்சி வரும் 7ம் தேதி துவங்குகிறது.பயிற்சியில் சேர 18 முதல் 45 வயது வரையுள்ளவராக இருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தங்களின் பெயரில் நுாறு நாள் அட்டையிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். கிராமப்புறத்தோர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.பயிற்சியில் சேர விரும்புவோர், ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, கல்வி சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம், நுாறு நாள் அட்டை நகல்களை அவசியம் கொண்டு வரவேண்டும்.இது தொடர்பாக கூடுதல் விபரங்களைப் பெற தொலைபேசி 04146 294115, மொபைல் 7598466681 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.