உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மின்சார வாரிய தொழிலாளர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்

 மின்சார வாரிய தொழிலாளர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொ றியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மண்டல செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ராஜ்குமார், கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் ராஜா வரவேற்றார். மாநில நிர்வாகிகள் சிவக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் சத்தியநாராயணன் , பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை ஐ.டி.ஐ., படித்தவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நிர்வாகிகள் அருட்செலவன், சரவணன், மாயவன், மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். வட்ட பொருளாளர் வேல்மணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ