பொதுத்தேர்வில் இ.எஸ்., பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி
விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற தோடு, மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய விழுப்புரம் இ.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் வெற்றி பெற்று, நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளி மாணவி ரிஷித்தா 500க்கு 495 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார். மாணவி ராபியா பேகம் 491 மதிப்பெண்களும், மாணவி சஞ்சனா 488 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பிடித்த மாணவர்களை தாளாளர் செல்வமணி, செயலாளர் பிரியா செல்வமணி, முதல் வர் சித்ராதேவி உட்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.