உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எலவனாசூர்கோட்டையில் போலி டாக்டர் கைது

எலவனாசூர்கோட்டையில் போலி டாக்டர் கைது

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் அடுத்த தகடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன், 52;இவர், எலவனாசூர்கோட்டையில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மருத்துவமனையை, எலவனாசூர்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி, ஆய்வு செய்தபோது, மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து கோவிந்தனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி