உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெள்ளத்தால் பயிர்கள் பாதிப்பு மனமுடைந்த விவசாயி தற்கொலை

வெள்ளத்தால் பயிர்கள் பாதிப்பு மனமுடைந்த விவசாயி தற்கொலை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் பாதிப்படைந்ததால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கயத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி, 49; விவசாயி. கடந்த பெஞ்சல் புயல், மழை, வெள்ளத்தால் இவரது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த ஒன்றரை ஏக்கர் நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. இதனால் மனமுடைந்த குமாரசாமி, கடந்த 8ம் தேதி காலை பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gokul Krishnan
டிச 15, 2024 18:49

மிக மிக வருத்தமான சம்பவம்.திருட்டு அரசின் திறமையின்மை .இது எந்த செய்தி சேனலிலும் வராது...இது பற்றி விவாதம் செய்யாது...


சமீபத்திய செய்தி