மரத்திலிருந்து விழுந்து விவசாயி பலி
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே புளிய மரத்திலிருந்து விழுந்து விவசாயி இறந்தார்.வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 45; விவசாயி. இவர் கடந்த 13ம் தேதி மதியம் 1:00 மணியளவில் அவரது வீட்டின் அருகில் உள்ள புளிய மரத்தில் ஏறி புளியம்பழம் உலுக்கினார். அப்போது மரத்திலிருந்து விழுந்து படுகாயம் அடைந்தார்.உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.