உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம்

 விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாநில தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில பொருளாளர் பெருமாள், துணைத் தலைவர் டில்லிபாபு முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால், தமிழக டெல்டா மாவட்ட பாசனம் பாதிக்கப்படுவதோடு, 30 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கும். எனவே, தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, கர்நாடக அரசு அணைக்கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்காமல், மத்திய அரசை கண்டித்து வரும் 26ம் தேதி தமிழகம் முழுவதும் விவசாய தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்பு பட்டை அணிந்து தர்ணா போராட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் தாண்டவராயன் நன்றி கூறி னார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை