உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சகாபுதீன், செயலாளர் முருகன், அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் அனவரதன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட துணைச்செயலாளர் உதயகுமார் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் கோரிக்கை போராட்டத்தில், போலீசார் துப்பாக்கி சூட்டில் விவசாயி சுப்கரன்சிங் இறந்தது. 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்ததையும், விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், கருப்புக்கொடி ஏந்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்