உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

விழுப்புரம்: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், விவசாயிகள் பயன்பெறலாம். வேளாண்மை இணை இயக்குநர் சீனுவாசன் செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கடந்த 2021-22ம் ஆண்டு முதல் செயல்படுத் தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்து கிராம ஊராட்சிகளை தன்னிறைவு அடையச் செய்து ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சி அடையச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் தரிசாக உள்ள நிலத்தில் முட்புதர்களை அகற்றி, சமன்படுத்தி உழவு பணிகளை மேற்கொள்ள எக்டருக்கு 9,600 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், வரப்பு பயிராக பச்சைப்பயறு, உளுந்து போன்ற பயிர்களை சாகுபடி செய்ய எக்டருக்கு 300 ரூபாய் மானியம் வழங்கப்படு கிறது. அத்துடன், நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை பெருக்கி மண் வளத்தை மேம்படுத்துவதற்கு, திரவ உயிர் உரங்கள் மற்றும் தொழு உரம் ஆகியவற்றை பயன்படுத்தி செயல் விளக்கத் திடல்கள் அமைத்திட எக்டருக்கு 450 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்ட இனங்களில் ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 எக்டர் வரை பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் விசைத்தெளிப்பான்களும் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உழவர் செயலியில் பதிவு செய்தும், வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டும், இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடையலாம். கடந்த நான்கு ஆண்டு களில், விழுப்புரம் மாவட்டத்தில் 557 கிராம ஊராட்சிகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 754 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். நடப்பு நிதியாண்டில், மாவட்டத்தில் 131 கிராம ஊராட்சிகளில், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை