உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பெஞ்சல் புயல் நிவாரண நிலுவை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

 பெஞ்சல் புயல் நிவாரண நிலுவை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 14 கோடி ரூபாய் நிவாரணத்தை வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்ட, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2023-24 ஆண்டு நெல், உளுந்து, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கும் விவசாயிகள் வழக்கம் போல் பயிர் காப்பீடு செலுத்தியிருந்தனர். அந்தாண்டு பெஞ்சல் புயலின் காரணமாக பெய்த கன மழையால், பயிர்கள் பாதிக்கப்பட்டு பெருத்த சேதம் ஏற்பட்டடது. தமிழக அரசு தரப்பில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு நிவாரணமும் வழங்கினர். ஆனால், அப்போது, பயிர் காப்பீடு செலுத்திய பெரும்பாலான கிராமங்களில், குறிப்பாக கண்டமங்கலம் ஒன்றியம் ராம்பாக்கம், சொர்ணாவூர், கலிஞ்சிக்குப்பம், மேல்பாதி, காணை ஒன்றியம் காணை, விக்கிரவாண்டி ஒன்றியம் செ.பூதுார் உள்ளிட்ட பல கிராமங்களில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இன்சூரன்ஸ் நிறுவனத்தால் பயிர் இழப்பீடு வழங்கப்படாமல், காலம் தாழ்த்தி வருகின்றனர். புயல் பாதித்து ஓராண்டுக்கு மேலாகியும், இழப்பீடு கணக்கிடப்பட்டு, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு 14 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்காமல் நிலவையில் உள்ளது. இது குறித்து, முதல்வரும், கலெக்டரும், உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை