மகன் மாயம் தந்தை புகார்
திருவெண்ணெய் நல்லுார்: மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். திருவெண்ணெய்நல்லூர் அடுத்த தடுத்தாட்கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் நாராயணன், 31; முடி திருத்தும் தொழிலாளி. இவர் கடந்த 8ம் தேதி மாலை 3:00 மணியளவில் வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து இவரது தந்தை அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.