உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேளாண் மையங்களில் மானிய விலையில் உரம்

வேளாண் மையங்களில் மானிய விலையில் உரம்

மரக்காணம் : மரக்காணம் பகுதி வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் சிங்க் சல்பேட் உரம் விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் சரவணன் கூறுகையில், 'அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் நெல் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நடவு செய்யக்கூடிய பகுதிகளில் சத்து குறைபாடு ஏற்படுவதால் பயிர்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.மேலும், துார்களின் எண்ணிக்கை அதிகரித்திடவும், அதிக பதர் வருவதை தவிர்த்திடவும், சீரான வளர்ச்சிக்காக அடியுரமாக ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் சிங்க் சல்பேட் உரத்தினை மணலுடன் கலந்து தெளித்திட வேண்டும்.மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திண்டிவனம், சிறுவாடி, மரக்காணம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் சிங்க் சல்பேட் உரங்களை 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை