உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

 அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் இறந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு கடந்த ஓராண்டில் 8 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தில் பணிபுரிந்து இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மேலாண் இயக்குநர் குணசேகரன் நிதியுதவி வழங்கி கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் பணியின் போதும், பணி அல்லாத போதும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், அனைத்து தொழிற்சங்கம் ஒத்துழைப்போடு 16 ஆயிரத்து 892 பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையில் இருந்து பணியின் போது இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய், பணியில் அல்லாத போது இறந்தோருக்கு 5 லட்சம் ரூபாய் வீதமும் வழங்கப்படுகிறது. அதன்படி, நவம்பர் மாதம் பணியில் அல்லாத போது இறந்த விழுப்பரம், வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மண்டலங்களைச் சேர்ந்த 8 பேரின் குடும்பங்களுக்கு அந்தந்த மண்டலங்களில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் மண்டலத்தை சேர்ந்த 3 குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுகளில் பணியின் போது இறந்த 8 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வீதம் 80 லட்சம் ரூபாயும், பணியில் அல்லாத போது இறந்த 149 குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வீதம் 7 கோடியே 45 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு குணசேகரன் கூறினார். விழுப்புரம் மண்டல பொது மேலாளர் ஜெகதீஷ், முதுநிலை துணை மேலாளர் துரைசாமி, துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை