உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சோபா குடோனில் தீ விபத்து

சோபா குடோனில் தீ விபத்து

மயிலம் : கூட்டேரிப்பட்டு மேம்பாலம் அருகே சோபா குடோனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டைச் சேர்ந்தவர் ஷாகுல், 45; இவர் கூட்டேரிப்பட்டு மேம்பாலம் அருகே சோபா செட் குடோன் வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் குடோனில் இருந்த சோபா செட்கள் எரிந்தது.திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து மயிலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ