வெள்ள நிவாரணம் எம்.எல்.ஏ., வழங்கல்
செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.செஞ்சி அடுத்த கோணை, ஆலம்பூண்டி, சத்தியமங்கலம், செம்மேடு, அங்கராயநல்லுார் ஊராட்சிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தார்.மஸ்தான் எம்.எல்.ஏ., ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2,000, அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். கூட்டுறவு சார்பதிவாளர் ஜான் கென்னடி, கூட்டுறவு சங்க செயலாளர்கள் பழனி குமார், விநாயகமூர்த்தி, முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.