| ADDED : ஜன 07, 2024 02:04 AM
விழுப்புரம்:டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ் மீது விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, கடந்தாண்டு ஜூன் 16ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்படும் என, நீதிபதி அறிவித்திருந்தார்.விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும், அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டி, ராஜேஷ் தாஸ், தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த ஐகோர்ட், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்கும்படி தேதி குறிப்பிடாமல் உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கு, விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ராஜேஷ்தாஸ் ஆஜரானார்.அப்போது, ஐகோர்ட் உத்தரவு குறித்து, ராஜேஷ்தாஸ் வழக்கறிஞர் தெரிவித்தார். அதை ஏற்று, மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை, வரும், 12ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.