உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எஸ்.ஐ.,யை தாக்கிய  நான்கு பேர் கைது

எஸ்.ஐ.,யை தாக்கிய  நான்கு பேர் கைது

விழுப்புரம்: செஞ்சியில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று மாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை சாலையில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, சிங்கவரம் கிராமத்தில் ஒருவரின் பைக்கை சிலர் சேதப்படுத்துவதாக தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், ஆயுதப்படை போலீஸ்காரர் சிலம்பரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.அங்கு, செஞ்சியை சேர்ந்த மணிகண்டனின் பைக்கை, சிங்கவரத்தை சேர்ந்த ராமன் மகன் ராஜதேவன்,43; ஏழுமலை மகன் கவியரசு,23; செஞ்சி சரவணன் மகன் இளமதிவாணன்,27; மற்றும் 17வயது சிறுவனும் சேர்ந்து சேதப்படுத்தியது தெரியவந்தது.அதனை கண்டித்த சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், ஆயுதப்படை காவலர் சிலம்பரசன் ஆகியோரை, ராஜதேவன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து, அரசு பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். அதில் காயமடைந்த சப் - இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து ராஜதேவன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி