உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ.எஸ். லார்ட்ஸ் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் 

இ.எஸ். லார்ட்ஸ் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் 

விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ். லார்ட்ஸ் இண்டர் நேஷ்னல் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.விழுப்புரம் லயன்ஸ் கிளப் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தினர். பள்ளி தாளாளர் செல்வமணி துவக்கி வைத்தார். பள்ளி செயலாளர் பிரியா செல்வ மணி முன்னிலை வகித்தார்.இம்முகாமில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் ௨வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மருத்துவ குழுவினரால், கண் பரிசோதனை நடத்தப் பட்டு, குறைபாடு உடைய வர்கள் கண்டறியப்பட்டனர்.அவர்களுக்கு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனை சார்பில் இலவசமாக கண் கண்ணாடி வழங்கினர்.விழுப்புரம் லயன்ஸ் கிளப் தலைவர் குமரவேல், திலிப் கோல்சா உள்ளிட்ட நிர்வாகிகள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற் றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ