உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ.எஸ்., கல்லுாரியில் இலவச கண் சிகிச்சை

இ.எஸ்., கல்லுாரியில் இலவச கண் சிகிச்சை

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியில் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்டம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லுாரியில் நடந்த முகாமிற்கு, முதல்வர் முரளிதரன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். உயர்நிலை நிர்வாகி செந்தாமரைச்செல்வன், டாக்டர் பிரகாஷ் சிறப்புரையாற்றினர்.முகாமில் 200க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் கண்களை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை குழுவினர் பரிசோதனை செய்து உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.முகாமை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜோன் சார்லஸ், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் பாலமுருகன், செஞ்சுருள் திட்ட அலுவலர் ராஜசேகரன் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி