உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ். கலை அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம், செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் முரளிதரன் தலைமை தாங்கி முகாமைத் துவக்கி வைத்தார். கோலியனுார் வட்டார மருத்துவ அலுவலர் பிரியா பத்மாசினி, டாக்டர்கள் இமையாதேவி, கோமதி, ராவணன் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்று, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதயம் மற்றும் ரத்தசோகை தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் செய்தனர்.மேல் சிகிச்சைக்காகவும் சிலர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜோன் சார்லஸ், செஞ்சிலுவைச் சங்க அலுவலர் பாலமுருகன், செஞ்சுருள் திட்ட அலுவலர் ராஜசேகரன் முகாமை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி