உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொது மருத்துவ முகாம்

பொது மருத்துவ முகாம்

விழுப்புரம் : விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் பொது மருத்துவ முகாம் நடந்தது. கடந்த 26ம் தேதி துவங்கிய முகாம் 2ம் தேதி வரை நடக்கிறது. நேற்று முன்தினம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தை துாய்மை செய்து, பொதுமக்களுக்கான இலவச பொது மருத்துவ முகாமை நடத்தினர். முகாமில், ரத்த அழுத்தம், சர்க்கரை, கண், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகள், பெண்கள், குழந்தைகளுக்கான மருத்துவம் சார்ந்த பிரச்னைகள் பரிசோதனை செய்யப்பட்டு, உரிய மருத்துவ ஆலோசனை வழங்கி, இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி துணை பேராசிரியர் பார்த்திபன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். 150க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். ஏற்பாடுகளை, பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் செந்தில்குமார், முதுகலை ஆசிரியர் ஜீவா, ஒருங்கிணைப்பாளர்கள் காங்கேயன், குழந்தைவேலு ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !