உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் : தேசிய பெண் குழந்தைகள் தினத்தை யொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது.வளவனுார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த பேரணியை, ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதரன் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., சுரேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரேமலதா முன்னிலை வகித்தனர். ஆலோசகர் முருகன் வரவேற்றார். பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பதாகை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், முத்துலட்சுமி, சமூக பணியாளர் வாசுகி, சப்-இன்ஸ்பெக்டர் கலைசெல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் பாபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை