உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோ-கோ விளையாட்டு போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

கோ-கோ விளையாட்டு போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

விக்கிரவாண்டி: வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோ-கோ விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து மாநிலப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி ஓமந்துார் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 வது, பிளஸ் 1 படிக்கும் மாணவ மாணவிகள் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கோ-கோ விளையாட்டில் பங்கேற்று முதலிடம் பெற்றனர். இதன் மூலம் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் அய்யனார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நடராஜன் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மேலாண்மை குழுத் தலைவர் உதயமாலா, உடற்கல்வி ஆசிரியர்கள் சுபாஷ் ,விமல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை