உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அன்னியூரில் பகுதி நேர நுாலகத்திற்கு அரசு அனுமதி: எம்.எல்.ஏ., தகவல்

 அன்னியூரில் பகுதி நேர நுாலகத்திற்கு அரசு அனுமதி: எம்.எல்.ஏ., தகவல்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி அன்னியூரில் பகுதி நேர நூலகம் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா அறிக்கை: விக்கிரவாண்டி தொகுதி, காணை ஊராட்சி ஒன்றியம் அன்னியூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பொதுமக்ககள் நலன் கருதி பகுதி நேர நுாலகம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மாவட்ட நுாலக அலுவலர் பரிந்துரை கடிதத்தை ஏற்று சென்னை, பொது நுாலக இயக்குனர் ஜெயந்தி பகுதிநேர நுாலகம் திறக்க அனுமதி வழங்கி உள்ளார். புதிய கட்டடம் கட்டும் இடத்தை நுாலகம் பெயரில் இலவச பத்திரப்பதிவு செய்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் புதிய கட்டடம் கட்டி ஒப்படைக்கவும் , பகுதி நேர தினக்கூலி பணியாளரை நுாலகத்திற்கு நியமனம் செய்து அவருக்கு சம்பளம் வழங்கவும் , மாவட்ட நுாலக அலுவலருக்கு பொது நுாலக இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். இதை அடுத்து அன்னியூரில் புதிய பகுதி நேர நுாலகம் திறக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்