உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரி மாணவர் விடுதி திறப்பு விழா 

அரசு கல்லுாரி மாணவர் விடுதி திறப்பு விழா 

திண்டிவனம்; திண்டிவனத்தில் அரசு கல்லுாரி மாணவர் விடுதி திறப்பு விழா நடந்தது. திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி அருகே தாட்கோ சார்பில் 5 கோடியே 84 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயில் மாணவர் விடுதி கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., மஸ்தான் மாணவர் விடுதியை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், தாட்கோ முதன்மைப் பொறியாளர் அன்புசாந்தி, சமூக நலத்துறை தாசில்தார் கலா, திண்டிவனம் நகர தி.மு.க., செயலாளர் கண்ணன், மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, மாவட்ட வர்த்தகர் அணி துணைத் தலைவர் பிரகாஷ், நகராட்சி கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், செல்வம், பாஸ்கர், ரேணுகா, நகர துணை செயலாளர் கவுதமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை