உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

அரசு பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., மண்டபத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாநில தலைவர் சுகமதி தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். மாநில இணை செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் ஜெயச்சந்திரராஜா, ஆறுமுகம், விஸ்வநாதன், கோவிந்தராஜன், ஞானஜோதி, சேகர், பாஸ்கரன், சீனிவாசன், ராஜாமணி, ஜெயகனேஷ், குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.தீர்மானங்கள்: சங்கத்தின் 8 வது மாநில மாநாட்டை வரும் ஜூன் மாதத்தில் நடத்துவது, சங்க மாநில பொறுப்புகளை திருத்தியமைப்பது, அரசு பணியாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்துவதற்கான ஆயத்த மாநாடு பிப்.16ம் தேதி நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை