மேலும் செய்திகள்
பல்லடம் அரசு பள்ளி ஆசிரியர் அணி அபாரம்
01-Sep-2025
விழுப்புரம்: முதல்வர் கோப்பை தடகள போட்டியில், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழுப்புரத்தில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த ஆக., 26ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பிரிவினருக்கான தடகள போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் இருபாலர் பிரிவிலும் தனித்தனியாக ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் உள்ளிட்ட குழுவினர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். அரசு ஊழியர்கள் பிரிவில், 100 மீ., ஆண்கள் பிரிவில் காவல்துறை அணியும், பெண்கள் பிரிவில் ஆசிரியர்கள் அணியும் முதலிடம் பெற்றனர். இப்போட்டிகளில், 250 பேர் கலந்துகொண்டனர்.
01-Sep-2025