உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விரைவில் வேலை நிறுத்த போராட்டம் அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு

விரைவில் வேலை நிறுத்த போராட்டம் அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு

விழுப்புரம் : பழைய பென்ஷன் திட்டம், காலி பணியிடங்கள் நிரப்புவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.விழுப்புரத்தில் நடந்த அரசு பணியாளர் சங்க மாநில பொதுக்குழுவில் பங்கேற்ற சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டம், குறைந்தபட்ச ஓய்வூதியம், அனைத்து பணிகளுக்கும் ஓய்வூதியத்தை அரசு அமல்படுத்த வேண்டும். அரசு துறையில் 12 லட்சம் நிரந்தர பணியிடங்களில் தற்போது 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்கள் தொகுப்பூதியம் மற்றும் அவுட் சோர்சிங் முறையில் நிரப்புவதை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், நிரந்தர ஊதிய விகிதம் வழங்க வேண்டும், ரேஷன் கடைகளில் சரியான எடையில், தரமான பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விரைவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம். இதற்கான ஆயத்த மாநாடு பிப்.16ம் தேதி நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை