உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தினர் போராட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தினர் போராட்டம்

விழுப்புரம்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.,) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத்திற்கு, மண்டல தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஏழுமலை வரவேற்றார். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி துவக்கவுரையாற்றினார். துணைத் தலைவர் ரகோத்தமன், மண்டல பொதுச்செயலாளர் வேலு கண்டன உரையாற்றினர். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் முத்துகுமரன், மாநில துணைத் தலைவர் அம்பிகாபதி வாழ்த்திப் பேசினர். போராட்டத்தில், 23 மாத ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வுகால பணப்பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் தெய்வீகன், காளிதாஸ், நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை