உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு போக்குவரத்து ஊழியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு., கிளை தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். ஓய்வுபெற்றோர் நல அமைப்பு பொது செயலர் ராமமூர்த்தி துவக்கி பேசினார். துணை செயலர் ராமதாஸ், பி.எஸ்.என்.எல்., சங்கம் மேகநாதன், சி.ஐ.டி.யு., துளசிங்கம், ரகோத்தமன், மூர்த்தி, ஓய்வுபெற்றோர் அலுவலர் சங்கம் நடராஜன், சகாதேவன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்துக்கழகத்தில் வரவு, செலவுக்குமான வித்யாச தொகையை அரசு வழங்க வேண்டும், ஓய்வு பெற்றோருக்கான பண பலன்களையும், டி.ஏ., உயர்வினையும் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வு பெற்றோர் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை