உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு செயற்குழு

 பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு செயற்குழு

விழுப்புரம்: விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் அச்சுதன் வரவேற்றார். மாநில பொருளாளர் நாராயணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமலைச்செல்வன் சிறப்புரையாற்றினர். மாவட்ட அமைப்பாளர் சதீஷ்குமார், துணை செயலாளர் ஆஷாமேரி, ஒருங்கிணைப்பாளர், வெற்றிவேல், வட்டார பொறுப்பாளர்கள் மணிகண்டன், ஜோசப், விஜயகுமார், ரமேஷ், லட்சுமணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலை நகர் களில் இன்று 27ம் தேதி ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் உரிமை மீட்பு மாநாட்டில் திரளாக பங்கேற்பது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களிடம் பறிக்கப்பட்ட ஊக்க ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை பழைய முறையில் வழங்க வேண்டும். பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டசெயலாளர் அந்தோணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை