உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கைவிடப்பட்ட மூதாட்டி முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பு

கைவிடப்பட்ட மூதாட்டி முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பு

திண்டிவனம் : உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டி, முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமம், பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி குள்ளம்மாள், 75; கணவர் இறந்ததால் உறவினர்கள் இருந்தும் அவர்கள் கைவிட்டதால் திண்டிவனம் ரயில் நிலையம் எதிரிரே உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில் கடந்த 20 நாட்களாக தஞ்சமடைந்திருந்தார்.மூதாட்டியின் நிலை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியவேந்தன், 40; விழுப்புரம் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தின் பேரில், சமூக நலத்துறை ஊழியர் மூதாட்டியை திண்டிவனம் சந்தைமேட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ