மேலும் செய்திகள்
ராகுல் பிறந்த நாள் விழா
21-Jun-2025
திண்டிவனம் : தமிழக காங்., செயல் தலைவர் விஷ்ணு பிரசாத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, மயிலம் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவரும், கடலுார் எம்.பி.,யான விஷ்ணு பிரசாத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ் தலைமையில், மயிலம் முருகர் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், திண்டிவனம் நகர காங்.,தலைவர் விநாயகம், வட்டாரத் தலைவர்கள் செல்வம், புவனேஸ்வரன், சேவாதள மாவட்ட தலைவர் சசிகுமார், பாலப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் புருஷோத்தமன், மாவட்ட செய்தி தொடர்பாளர் வெங்கட், வட்டார தலைவர் கலிவரதன், மகிளா காங்கிரஸ் வட்டார தலைவர் காளியம்மாள், மூத்த நிர்வாகி ராமானுஜம், ஐ.டி.,பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தமிழ்வாணன், பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், விஷ்ணு பிரசாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
21-Jun-2025