கோவிலுக்கு வருவதற்கான வழி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, சென்னை - கும்பகோணம் சாலையில் விக்கிரவாண்டிக்கு அருகாமையில் பனையபுரம் அமைந்துள்ளது . சென்னையிலிருந்து 157 கி.மீ., திருச்சியிலிருந்து விழுப்புரம் வழியாக 174 கி.மீ., விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., புதுச்சேரியிலிருந்து 33 கி.மீ., கடலுாரிலிருந்து 58 கி.மீ., பண்ருட்டியிலிருந்து 29 கி.மீ ., துாரத்தில் உள்ளது. வட, தென் மாவட்டங்களிலிருந்து கோவிலுக்கு வருபவர்கள் விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் இறங்கி ஆட்டோவில் 2 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலை அடையலாம். விழுப்புரத்திலிருந்து திருக்கனுார் வழியாக புதுச்சேரி செல்லும் அனைத்து தனியார் பஸ்களும் பனையபுரத்தில் நின்று செல்லும். வட, தென் மாவட்டங்களிலிருந்து பாசஞ்சர் ரயிலில் வருபவர்கள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் 2 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலை அடையலாம். எக்ஸ்பிரஸ் ரயிலில் வருபவர்கள் விழுப்புரம் சந்திப்பில் இறங்கி பஸ் மூலம் கோவிலுக்கு வரலாம். விமானம் மூலம் வருபவர்கள் புதுச்சேரி விமான நிலையம் இறங்கி அங்கிருந்து பஸ் மூலம் பனையபுரம் கோவிலுக்கு வரலாம்.