உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், லட்சுமிநாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் சதீஷ்குமார், 28; கார் டிரைவர். இவர் மனைவி கீர்த்தி (எ) ஜீனத், 24; இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளார்.கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கீர்த்தி, கடந்த 3 மாதங்களாக விழுப்புரம் ஆசிரியர் நகரில் வாடகை வீட்டில் தங்கி, மளிகை கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மனைவி வீட்டிற்கு சென்ற சதீஷ்குமார், அவரை சந்தேகப்பட்டு திட்டி, தாக்கியுள்ளார்.இதுகுறித்து கீர்த்தி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி