உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அடையாள வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ பிரசாரம்

 அடையாள வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ பிரசாரம்

விக்கிரவாண்டி: ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் பிரசாரம் செய்தனர். விழுப்புரம் மாவட்ட ஜாக்டோ ஜியோ சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவும், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, தொடக்கக் கல்வி துறையை பாதிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்ய கோருவது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. நேற்று விக்கிரவாண்டி வட்டார ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மகிமைதாஸ், முகமது மீரான், தாஸ், புகழேந்தி, சவரிமுத்து, குருமூர்த்தி, செல்வமணி, ஜான்சன், வசந்தராஜா ஆகியோர் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், சத்துணவு, அங்கன்வாடி, மருத்துவ மையங்களுக்கு சென்று துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை