| ADDED : டிச 08, 2025 06:35 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. கோலியனுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் அண்ணாமலை தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர், கவிதா முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் தமிழரசி வரவேற்றார். மாநில செயலாளர் தீபக்நாதன், லட்சுமணன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினர். தி.மு.க., மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன், ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், துணைச் செயலாளர் ஸ்ரீதர், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், அங்கன்வாடி, பள்ளிகள், பஞ்சாயத்து கட்டடம், ரேஷன் கடை, மகளிர் கட்டடம், சமுதாய கட்டடங்களில் சாய்வுதளம் கைப்பிடியோடு அமைத்திட வேண்டும். இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள் அமைக்க வேண்டும். அரசு வழங்கும் நலத்திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளை உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்த முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.