உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுகாதார நிலையம் திறப்பு விழா

சுகாதார நிலையம் திறப்பு விழா

செஞ்சி: செஞ்சி ஒன்றியம் அணையேறி ஊராட்சியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி ஆனந்தன் முன்னிலை வகித்தனர். டாக்டர் நதியா வரவேற்றார்.அமைச்சர் மஸ்தான் புதிய துணை சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அனந்தபுரம் பேரூராட்சி சேர்மன் முருகன், ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயபாலன், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, ஒன்றிய பொருளாளர் சாரங்கபாணி, சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர்கள் ஏழுமலை, சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை