தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு
திண்டிவனம்: திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தில் துணை இயக்குநர் ஆய்வு செய்தார். திண்டிவனத்திலுள்ள தீயணைப்பு நிலையத்தில் துறை துணை இயக்குநர் முரளி, ஆய்வு செய்தார். அப்போது, வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து தீயணைப்புத்துறை வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது, தீயணைப்புத்துறை விழுப்புரம் மாவட்ட அலுவலர் பாஸ்கரன், திண்டிவனம் நிலைய அலுவலர் மாரிச்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.