உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாய ஊக்கநிதி திட்ட பயனாளிகள் விபரங்களை புதுப்பிக்க அறிவுறுத்தல்

விவசாய ஊக்கநிதி திட்ட பயனாளிகள் விபரங்களை புதுப்பிக்க அறிவுறுத்தல்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட விவசாய ஊக்கநிதி திட்ட பயனாளிகள், விடுபட்ட விபரங்களை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் கணேசன் செய்திக்குறிப்பு:மத்திய அரசு விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டத்தின் கீழ், 4 மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 6,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்குகிறது. இத்திட்டத்தின்கீழ் பிப்ரவரி 2024ம் ஆண்டு வரை 16 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளன.விழுப்புரம் மாவட்டத்தில், இத்திட்டத்தில் 13 ஆயிரத்து 717 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதில் 9,404 விவசாயிகள் தங்கள் விபரங்களை போர்ட்டலில் (இ கே.ஓய்.சி) புதுப்பிக்காமல் உள்ளனர்.எனவே, தங்களது வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்